சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.