கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னை அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்

சென்னை அணியின் முக்கிய வீரர் சஞ்சு சாம்சன்அணியில் இணைந்துள்ளார்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர் சஞ்சு சாம்சன்அணியில் இணைந்துள்ளார். அவர் இன்று முதல் பயிற்சியை தொடங்க உள்ளார்.சென்னை அணி ஜடேஜா, சாம் கரனை டிரேடிங்கில் கொடுத்து ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்கியது.

சமீபத்தில் டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல சஞ்சு சாம்சன் முக்கிய வீரராக இருந்தார். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் 30ம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.