கொல்கத்தா,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஏற்கனவே கொல்கத்தா அணியின் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகியுள்ள நிலையில்,ஆகாஷ் தீப் விலகியுள்ளது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.