சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத் தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத் தில் நடப்பு சாம்பியனான ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் இன்று தொடங்குவதால், இதை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டது. அது ஐபிஎல் கிரிக்கெட்டை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கிறது.