மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது வீரர்கள் அறைக்குள் அதிகாரபூர்வ மற்ற பார்வையாளர்கள் நுழைய அனுமதி அளிக்கக்கூடாது. போட்டியின் போது, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இடங்களில் அணியின் உரிமையாளர் கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடக்கூடாது. வீரர்கள் அனும தியின்றி ஓட்டல் அறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்பது உள் பட பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது. இந்த விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அணி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.