கிரிக்கெட்

ஐ.பி.எல்: சென்னை-லக்னோ ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை-லக்னோ அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 10-ந் தேதி மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று பகல் 12.15 மணிக்கு தொடங்குகிறது.

ரூ.2,000, ரூ.3,500, ரூ.4,000, ரூ.4,700, ரூ.8,000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. www.chennaisuperkings.com சி.எஸ்.கே. ஆப் மற்றும் www.district.in ஆகிய இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஒருவருக்கு அதிகபட்சமாக 4 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.