பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் இன்று முதல் பயிற்சியை தொடங்க உள்ளார்.பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் 28ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.