ஐபிஎல் 2026

மிகச்சிறந்த கேட்ச்... ஸ்ரேயஸ் ஐயரை பாராட்டிய சச்சின்

ஐயரின் கேட்ச்சை பார்த்தை ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சியடைந்தனர்.

மும்பை,

மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்தை பவுண்டரி லைனுக்கு அப்பால் நின்ற ஸ்ரேயஸ் ஐயர் லாவகமாக பிடித்தார். அப்போது தான் பவுண்டரிக்கு பின்னால் விழுவதை அறிந்த ஐயர், உடனடியாக பந்தை அருகில் நின்ற வீரரிடம் வீசினார். இதனால் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார்.

இந்தக் காட்சியைப் பார்த்து மும்பை இந்தியன்ஸ் வீரர்களான ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சியடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், ஸ்ரேயஸ் ஐயரின் கேட்ச் குறித்து சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

ஷ்ரேயாஸ் அய்யரின் இந்த கேட்ச் வெறும் உடல் திறமைக்கு அப்பால், அபாரமான சூழ்நிலை அறிதலைக் கொண்டது. பந்தின் வேகம், உயரம், எல்லைக்கோட்டின் தூரம், காலைப் பதிக்காது சரியான முறையில் ஜம்ப் செய்தது என அனைத்தையும் கணக்கிட்டார். காற்றில் இருந்தவாறே பந்தைப் பிடித்து, தரையில் இறங்கும்முன் அருகில் உள்ள வீரரிடம் வீசினார். இவையனைத்தையும் நொடிப்பொழுதில் செய்ய, அளப்பரிய விழிப்புணர்வு, துல்லியம், உடல் வலிமை, மன அமைதி தேவை. நான் நேரில் கண்ட மிகச்சிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்று என பதிவிட்டுள்ளார்.