லக்னோ,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் கூறி இருப்பதாவது;
இலக்கை விரட்டிப் பிடித்துவிடலாம் என நாங்கள் மிகவும் உறுதியாக இருந்தோம். வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். நாங்கள் இந்த ஆட்டத்தை சரியாக கொண்டு சென்றோம். ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் மட்டுமே பின்தங்கியிருந்தோம். அதுவே வெற்றியை தீர்மானித்துள்ளது.
மிட்செல் மார்ஷ் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. அவருக்கு எந்த பந்துவீச்சாளரைப் பந்துவீச வைப்பது என்பதில் எனக்குக் குழப்பம் இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருந்தது. பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது. தோல்வி குறித்து ஆராய சிறிது நேரம் தேவை. எங்களுக்கு இன்னும் நான்கு ஆட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆட்டமாக, ஒவ்வொரு படியாக முன்னேறி வருகிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.