அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங், காயம் காரணமாக நமீபியாவுக்கு எதிரான ஒருநாள் (ODI) கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், நமீபியா அணியின் பேட்டிங்கின்போது பீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்டிர்லிங்கின் இடது கை விரலில் முறிவு ஏற்பட்டது.
இதனால் அவரால் அயர்லாந்து அணிக்காக பேட்டிங் செய்யவும் முடியவில்லை. இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நமீபியா 2–1 என முன்னிலை பெற்றுள்ளது. எஞ்சிய இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து அணியில் டிம் டெக்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை அறிமுகமாகாத டிம் டெக்டர், அயர்லாந்து அணிக்காக எட்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.