கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் தோல்வி: தொடரை இழந்த இந்தியா

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

பெல்பாஸ்ட்,

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றிபெற்றது.

2வது டி20

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும், தொடரை கைப்பற்றும் நோக்கில் அயர்லாந்தும் களமிறங்கின.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து திரில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் அயர்லாந்து கைப்பற்றியது. இந்த தோல்வியின் மூலம் அயர்லாந்திடம் முதல் முறையாக டி20 தொடரை இந்தியா இழந்துள்ளது.