கிரிக்கெட்

கடைசி டி20: இந்தியா - அயர்லாந்து இன்று மோதல்

முதல் டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து அதிர்ச்சி அளித்தது.

பெல்பாஸ்ட்,

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது.

இதில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அதிர்ச்சி அளித்தது.

கடைசி டி20 போட்டி

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற அயர்லாந்தும், தொடரை சமன் செய்ய இந்தியாவும் போராடும் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.