கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி?

இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே இதற்கான பேச்சுவார்த்தை சாதகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிசிசிஐ

இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே இதற்கான பேச்சுவார்த்தை சாதகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகே இந்தச் சுற்றுப்பயணம் உறுதி செய்யப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இதுவரை வெளியிடவில்லை

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக, இந்திய அரசின் அனுமதி கிடைப்பதும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT