லக்னோ,
இந்தியா நட்சத்திர வீரர் விராட் கோலியின் பத்து ஆண்டுகால சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்களை எடுத்ததால் கோலி சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார் இஷான் கிஷன்.
இஷான் கிஷன், இந்த ஆண்டில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டில் விராட் கோலி 1,614 ரன்கள் எடுத்ததே இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. தற்போது இஷான் கிஷன் 1,615 ரன்களை கடந்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த ஆண்டில் பல்வேறு இருபது ஓவர் போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் குவித்து வந்ததன் மூலம் கோலியின் நீண்டகால சாதனையை முறியடித்துள்ளார். இந்திய இருபது ஓவர் கிரிக்கெட்டில் இளம் தலைமுறை வீரர்களின் எழுச்சிக்கு இஷான் கிஷனின் இந்த சாதனை மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.