வெல்லிங்டன்,
இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் லெவன் அணியில் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், வைபவ் உடனடியாக அணியில் இடம்பிடிப்பது கடினம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்
இதுகுறித்து பேசிய அவர்,
இந்திய அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், அவர்களுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்ப்பது தற்போதைய சூழலில் எளிதான முடிவாக இருக்காது.
வைபவ் மிகவும் இளம் வீரர் , சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கான வாய்ப்புகளைப் பெற அவருக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. மேலும், தொடக்க வீரர்கள் தொடர்ந்து ரன்கள் குவித்து வருவதுடன், உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர்.வெளிநாட்டு மைதானங்களில் விளையாடுவதற்கான சூழல்களை இப்போதே புரிந்துகொள்வது வைபவுக்கு எதிர்காலத்தில் உதவியாக இருக்கும். என்றும் ஐயர் குறிப்பிட்டுள்ளார்.