லண்டன்,
அயர்லாந்து தொடரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் நடைபெறுகிறது. இந்திய அணி தொடர்பாக பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது,
அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். ஒரு தனிநபர் மட்டுமே சிறப்பாக விளையாடுவது போன்ற நிலை இல்லை. அதே வேளையில், வீரர்கள் தன்னம்பிக்கை பெறும் வகையில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, அவர்களுக்குத் துணையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும். கடந்த உலகக் கோப்பையை வென்றுகொடுத்த வீரர்களுக்கு இந்த வடிவிலான போட்டியை எப்படி அணுகுவது என்பது குறித்த தெளிவான புரிதல் உள்ளது. டி20 போட்டிகளில் அவர்கள் முக்கியத் தூண்களாகத் திகழ்ந்து வருகின்றனர், எனவே அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். என் தெரிவித்தார்.