கிரிக்கெட்

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட வேண்டும்: அஸ்வின்

கில் விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்று அஷ்வின் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் கில் விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்று அஷ்வின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

கில் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்றால், அவருக்குப் பதிலாக அந்த வாய்ப்பு யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட வேண்டும். ஏற்கெனவே திறமையை நிரூபித்துள்ள ஒரு இளம் வீரருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவது மிகவும் முக்கியம். சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடும் ஒரு வீரருக்கு, சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்துவதோடு, அவரது தன்னம்பிக்கையையும் பாதிக்கக்கூடும். ஜெய்ஸ்வால் போன்ற திறமையான வீரருக்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவருக்குத் தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகளை வழங்கினால், தனது திறமையை வெளிப்படுத்தி அணிக்கு மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்ய முடியும். எனவே, கில் விளையாடாத பட்சத்தில், அந்த இடத்தை ஜெய்ஸ்வாலுக்கு வழங்கி, தனது திறமையை நிரூபிக்க அவருக்கு ஒரு நியாயமான வாய்ப்பை அளிக்க வேண்டும்.என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT