கிரிக்கெட்

“160 முதல் 180 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்” - தோல்விக்கு பின் நியூசிலாந்து கேப்டன் பேச்சு

இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வெலிங்டன்,

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பாராட்டியதுடன், தங்கள் அணி பேட்டிங்கில் கூடுதல் ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாராட்டிய சாண்ட்னர்

இதுகுறித்து சாண்ட்னர் கூறுகையில், “இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி அசத்தினர்.

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும், போராடி 160 முதல் 180 ரன்கள் வரை எடுத்திருந்தால், அதன் பிறகு போட்டியை எங்கள் பக்கம் திருப்பியிருக்க முடியும். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்” என்றார்.

தொடரில் முன்னிலை

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் குர்னூர் பிரார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து 135 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மழை குறுக்கிட்டபோது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT