இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson), லான்காஷயர் கவுண்டி அணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, இத்தாலியா டி10 லீக்கில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இத்தாலியில் நடைபெறவுள்ள இத்தாலியா டி10 லீக்கில் நபோலி நைட்ஸ் (Napoli Knights) அணியின் கேப்டனாகவும் இணை உரிமையாளராகவும் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட ஆண்டர்சன், இத்தாலியில் நடைபெறவுள்ள இந்தப் புதிய டி10 தொடரில் பங்கேற்பது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆண்டர்சன் லான்காஷயர் அணியுடன் 25 ஆண்டுகள் தொடர்பில் இருந்தார். ஆனால், 2027 சீசனுக்கான அவரது ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டாம் என்று அந்தக் கவுண்டி அணி முடிவு செய்தது. 2026 கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அவர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் சிறந்த வீரர் விருதையும் பெற்றிருந்தார். எனவே, ஒப்பந்தம் நீட்டிக்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. அவரது நீண்டகால பந்துவீச்சு கூட்டாளியான ஸ்டூவர்ட் பிராட், லான்காஷயர் இந்த முடிவைக் கையாண்ட விதத்தை விமர்சித்தார்.
நவம்பர் 18 முதல் 29 வரை நடைபெறவுள்ள இந்த டி10 தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. கிறிஸ் கெய்ல், ஷான் மார்ஷ், டேவிட் மலான் உள்ளிட்ட வீரர்களும் பங்கேற்க உள்ளனர். போட்டிகளுடன் பயிற்சி முகாம்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆண்டர்சனின் நிறுவனம் இப்பயிற்சி நடவடிக்கைகளில் உதவவுள்ளது. இத்தாலியில் உள்ள இளம் வீரர்களை வளர்த்து, 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கில் போட்டியிடும் அளவுக்கு கிரிக்கெட்டை மேம்படுத்துவது இந்தத் திட்டத்தின் நீண்டகால நோக்கமாகும்.