ஜெய்ப்பூர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூ ரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டை வீழ்த்தியதால் அவரின் முகத்திற்கு நேராக சென்று ஜேமிசன் மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.