ராவல்பிண்டி,
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையிலான முத லாவது ஒரு நாள் போட்டி வருகிற 30-ந்தேதி ராவல்பிண்டியில் நடக்கிறது. பேட் கம்மின்ஸ் ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதால் இந்த தொட ருக்கான ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டனாக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஐ.பி.எல்.-ல் லக்னோ அணிக்காக ஆடிய போது மிட்செல் மார்சுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட் டுள்ளது. இதனால் அவர் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளார். விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ் தான் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணி அங்கிருந்து வங்காளதேசத் துக்கு சென்று ஜூன் 9-ந்தேதி முதல் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. வங்காளதேச தொடரிலும் மிட்செல் மார்ஷ் விளை யாடுவது சந்தேகம் தான்.