கிரிக்கெட்

ஜோஷ் இங்கிலிஷ் அதிரடி: சென்னை அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ

20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கி ழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின் றன. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் 53-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் லக்னோ அணி அதிரடியாக விளையாடியது. குறிப்பாக லக்னோ அணியின் ஜோஷ் இங்கிலிஷ் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். சென்னை அணியின் பந்துவீச்சை அவர் துவம்சம் செய்தார்.

மறுபுறம் மார்ஷ் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் பூரன்1 ரன்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார். அரைசதமடித்த இங்கிலிஷ் 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து பின்னர் ரிஷப் பண்ட் 15 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் ஓவர்டன் 3 விக்கெட் வீழ்த்தினார்.