கிரிக்கெட்

ஜோஷ் இங்கிலிஷ் அதிரடி: லக்னோ அணி 196 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

லக்னோ,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டன. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் லக்னோவில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடக்கத்தில் குல்கர்னி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் பூரன் 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோஷ் இங்கிலிஷ், ஆயுஷ் பதோனி இருவரும் அதிரடியாக விளையாடினர்.ஆயுஷ் பதோனி 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஜோஷ் இங்கிலிஷ் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் அரைசதம் அடித்து 72 ரன்கள் எடுத்தார். பின்னர் அப்துல் சமத் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.