கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் இங்கிலீஷ் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஷ் விலகியுள்ளார். அவர் எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோஷ் இங்கிலிசுக்கான மாற்று வீரரை ஆஸ்திரேலிய அணி இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.