ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தனது விருப்பத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஆட்டம் மற்றும் உடல்தகுதி நிலையை கருத்தில் கொண்டு, 2027 ஐபிஎல் தொடரில் பங்கேற்கத் தயாராக இருப்பதாக ஆர்சிபி நிர்வாகத்திடம் அவர் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சில் முக்கியப் பங்காற்றியவர் ஹேசில்வுட். தனது துல்லியமான பந்துவீச்சு, வேகம் மற்றும் பவுன்ஸ் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். குறிப்பாக பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் அவரது பந்துவீச்சு அணிக்கு பயனுள்ளதாக அமைந்தது.2027 ஐபிஎல் தொடருக்காக ஹேசில்வுட்டை ஆர்சிபி அணி ரூ.12.5 கோடி மதிப்பில் தக்கவைத்துள்ளது.
2027 ஐபிஎல் தொடரிலும் ஹேசில்வுட் விளையாட விருப்பம் தெரிவித்திருப்பது ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.