கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நேபாளம் இன்று மோதல்

2-வது நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்ஷயா ராஜ்சந்தானி தலைமையிலான இந்திய அணி, நேபாளத்துடன் (ஏ பிரிவு) மோதுகிறது.

மஸ்கட்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் இன்று விளையாடுகின்றன.

13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று தொடங்கியது. 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

லீக் ஆட்டம்

தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை- மலேசியா (பி பிரிவு) அணிகள் மோதின. முதலில் ஆடிய மலேசிய அணி 28.1 ஓவர்களில் 88 ரன்னில் சுருண்டது. இலங்கை அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 113 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.

2-வது நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்ஷயா ராஜ்சந்தானி தலைமையிலான இந்திய அணி, நேபாளத்துடன் (ஏ பிரிவு) மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் சந்திக்கின்றன.

SCROLL FOR NEXT