மஸ்கட்,
8 அணிகள் இடையிலான 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியனான பர்ஹான் யூசுப் தலைமையிலான பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப் பற்றிய பாகிஸ்தான் அணி நடப்பு தொடரிலும் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. அந்த தோல்விகளுக்கு பதி லடி கொடுத்து 9-வது முறையாக மகுடம் சூடும் வேட்கையுடன் இந்திய அணி களம் காண்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசுப் பர்ஹான் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.