கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை - பாகிஸ்தானிடம் போராடி வீழ்ந்த இந்தியா

இந்திய அணி 46.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அல் அமெராத்,

ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா போராடி வீழ்ந்தது.

பேட்டிங்

13வது ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சரிவிலிருந்து மீட்ட அர்ஜுன் ராஜ்புத்!

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் லக்சயா ராஜேஷ் ராய்சந்தானி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆர்யவீர் சேவாக் 22 ரன்களும், வி.கே. வினீத் 8 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய அர்ஜுன் ராஜ்புத், பாகிஸ்தான் பந்துவீச்சைச் சமாளித்து ரன்களைக் குவித்தார். அதிரடியாக விளையாடிய அவர் சதமடித்து அசத்தினார்.

அவர் 85 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் வெற்றி

இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 7 விகெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியில் ஹம்சா சாஹூர் ஆட்டமிழக்காமல் 100(108) ரன்கள் எடுத்து வெறிக்கு உதவினார். இதன் மூலம் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT