கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நேபாளம்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அல் அமரத்,

ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நேபாள அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 129 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

128 ரன்களுக்கு ஆல் அவுட்

ஓமனில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த நேபாள அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 42.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியில் தர்ஷ் சோனர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். ஆசிஷ் லுஹார் 29 ரன்களும், நிராஜ் குமார் யாதவ் 20 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை.

சிறப்பான பந்துவீச்சு

இந்திய அணியின் பந்துவீச்சில் இஷான் சூட் மற்றும் அர்ஜுன் ராஜ்புத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யஷ்வீர் கவுட் 2 விக்கெட்டுகளையும், கவ்யா படேல், மனல் சவுகான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT