மஸ்கட்
8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி. ஐக்கிய அரபு அமீரகத்தை (காலை 10.30 மணி) சந்திக்கிறது. ஒரு வெற்றி, தோல்வி கண்டுள்ள இரு அணிகளும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. இதில் வெற்றி காணும் அணி, இந்த பிரிவில 2-வது அணியாக அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் அயான் மிஷாப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.