ராஞ்சி,
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக் கான (ஜூனியர்) அகில இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த அரையிறுதி யில் தமிழக அணி, மராட்டியத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த தமிழக அணி 45.2 ஓவர்களில் 125 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் மராட்டிய அணி ஆடிய போது மழை குறுக்கிட்டது. 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ரன் எடுத்திருந்த போது, மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து லீக் சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்ததன் அடிப்படையில் மராட்டிய அணி (20 புள்ளி) இறுதிப்போட்டிக்கு முன்னேறி யது.