புதுடெல்லி,
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கேன் வில்லியம்சன் ஓய்வு தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் வார்னர் கூறியதாவது.
இத்தனை ஆண்டுகளாக உங்களுடன் இணைந்தும், உங்களுக்கு எதிராகவும் விளையாடியது எனக்குக் கிடைத்த பெருமை. நீங்கள் குவித்த ரன்கள், சாதனைகள் மற்றும் வெற்றிகள் அனைத்தும் உங்கள் சிறப்பைத் தாமாகவே பறைசாற்றுகின்றன; ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக என்னை மிகவும் கவர்ந்தது சிறந்த ஆளுமைதான். உலக கிரிக்கெட்டில் மிகவும் நேர்மையான, நல்ல மனிதர்களில் ஒருவராக திகழ்கிறீர்கள். நாம் அணியினராக இருந்தாலும் சரி, எதிரணிகளாக இருந்தாலும் சரி, உங்களுடன் களத்தைப் பகிர்ந்துகொள்வதை நான் எப்போதும் விரும்பினேன்.உங்கள் அடுத்தகட்ட வாழ்க்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.