கொல்கத்தா,
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் ஆட்டம், பலத்த மழை காரணமாக தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 65வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டிக்கான டாஸை வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிக்கல்டன் 6(7) ரன்களிலும், ரோகித் சர்மா15(13) ரன்களிலும் அவுட்டாகினர். தொடர்ந்து களமிறங்கிய நமன் தீர் 0(3) ரன்களிலும் சூர்ய குமார் யாதவ் 15(6) ரன்களிலும் அவுட்டாகினர்.
இதையடுத்து திலக் வர்மா மற்றும் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். அப்போது திலக் வர்மா7(12) மற்றும் பாண்டியா 7(7) ரன்கள் அடித்திருந்தபோது மழை குறிக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 8 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா மற்றும் பாண்டியா களத்தில் உள்ளனர். விரைவில் ஆட்டம் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.