கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: கேஎல் ராகுல் சதம்

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேஎல் ராகுல் சதம் விளாசியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 5 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஒருநாள் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டெஸ்ட்

இதனை தொடர்ந்து, இந்தியா, நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் கடந்த 19ம் தேதி தொடங்கியது.

இந்த டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஹெண்ட்ரி நிகோலஸ் 175 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

கேஎல் ராகுல் சதம்

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 85 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். தற்போதைய நிலவரப்படி முதல் இன்னிங்சில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது.

கேஎல் ராகுல் 101 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்தை விட 107 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா உள்ளது.

SCROLL FOR NEXT