கிரிக்கெட்

பரிசாக கிடைத்த ஸ்மார்ட்போனை மைதான பெண் ஊழியருக்கு வழங்கிய கே.எல்.ராகுல்

பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு தான் பரிசாகப் பெற்ற ஸ்மார்ட்போனை மைதானத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கே.எல்.ராகுல்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 7ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற கே.எல்.ராகுலின் பொறுப்பான ஆட்டம் முக்கியப் பங்கு வகித்தது.

இந்தப் போட்டியில் 'கேம் சேஞ்சர் ஆஃப் தி மேட்ச்' விருதைப் பெற்ற கே.எல்.ராகுலுக்கு ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்பட்டது. அந்தப் பரிசைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல், மைதானத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கினார். ராகுலின் இந்தச் செயலை பிசிசிஐ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளது.

ராகுலிடம் இருந்து ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண் ஊழியர் ஆச்சரியமடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுல் தனக்குக் கிடைத்த போனை எனக்குக் கொடுத்தார். இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவருடைய இந்த அன்பான செயலால் மிகவும் ஆச்சரியமடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT