கிரிக்கெட்

கோலி எனக்கு மிகுந்த உத்வேகம் அளித்தவர் – பி.வி. சிந்து

அனுபவங்களும் ஆலோசனைகளும் மிகுந்த உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்து, கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தனக்கு அளித்த ஊக்கம் மற்றும் ஆலோசனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். விளையாட்டுத் துறையில் வெற்றி, தோல்வி, காயம், மன அழுத்தம் என பல்வேறு சவால்களைச் சந்திக்கும் வீரர்களுக்கு மற்ற விளையாட்டுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களின் அனுபவங்களும் ஆலோசனைகளும் மிகுந்த உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பேட்மிண்டன்

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அவர் மிகவும் அன்பான மனிதர். தங்களுக்குள் பலமுறை உரையாடல்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, தனது கிரிக்கெட் அனுபவங்களையும், கடினமான சூழ்நிலைகளில் தன்னை எவ்வாறு உற்சாகப்படுத்திக் கொள்வது என்பதையும் கோலி தன்னுடன் பகிர்ந்து கொண்டார். சில நேரங்களில் தான் மனதளவில் மிகவும் சோர்வடைந்திருந்தபோது, மீண்டும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கும், போட்டிக்குச் சென்று தனது இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதற்கும் கோலி வழங்கிய ஆலோசனைகள் பெரிதும் உதவியது. என தெரிவித்துள்ளார்.

காயம்

கடந்த 2025ஆம் ஆண்டு காயம் காரணமாக சிந்து தனது கிரிக்கெட் அல்லாத பேட்மிண்டன் போட்டிப் பயணத்தில் கடினமான காலகட்டத்தைச் சந்தித்தார். கால் விரலில் ஏற்பட்ட காயம், தொடர்ந்து நடைபெற்ற சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகள் காரணமாக அவரால் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்பட முடியவில்லை. போட்டிகளில் முடிவுகள் சாதகமாக அமையாததால் மனதளவிலும் சோர்வடைந்திருந்தார். அப்போது விராட் கோலியைத் தொடர்புகொண்டு தனது நிலைமை குறித்து பேசியுள்ளார். சிந்துவின் தகவலின்படி, கோலி சில நிமிடங்களிலேயே பதிலளித்ததுடன், அடுத்த நாளே இருவரும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்தச் சந்திப்பில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் தங்களுக்குள் மட்டுமே இருக்கட்டும் என்றும், கோலியின் ஒவ்வொரு வார்த்தையும் தனக்கும் தனது கணவர் வெங்கட தத்தா சாயிக்கும் மறக்க முடியாததாக இருந்ததாகவும் சிந்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT