பெங்களூரு,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆ டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் ஹேசில்வுட் திரும்பினார். நட்சத்திர வீரர் விராட் கோலி 'இம்பேக்ட்' வீரர்களின் பட்டியலில் வைக்கப்பட்டார். 'டாஸ்' ஜெயித்த பெங்களூரு கேப்டன் ரஜத் படி தார் முதலில் லக்னோவை பேட் செய்ய அழைத்தார்.இதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் லக்னோ அணி 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
147 ரன் இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. விராட் கோலியும், பில் சால்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். 'இம்பேக்ட்' வீரராக கோலி ஆடுவது இதுவே முதல் முறையாகும். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 49 ரன்களில் (34 பந்து, 6 பவுண் டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆகிப்போனார். எனினும் அடுத்து வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இதற்கிடையே, விராட் கோலி அவுட் ஆகும் போது அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். இதனால் அப்செட் ஆன அனுஷ்கா சர்மா கன்னத்தில் கைவைத்தபடி இருக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.