கிரிக்கெட்

“கோலி - ரோஹித் விளையாடுவது இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த வரம்” - பாகிஸ்தான் முன்னாள் வீரர் புகழாரம்!

இருவரின் அனுபவமும் பங்களிப்பும் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய வரம் என்று தெரிவித்துள்ளார்.

துபாய்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இருவரின் அனுபவமும் பங்களிப்பும் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய வரம் என்று தெரிவித்துள்ளார்.

“கோலியின் சாதனைகளே பேசும்”

விராட் கோலி குறித்து பேசிய தன்வீர், அவரது புள்ளிவிவரங்கள் பிரமாண்டமானவை என்றும், இந்திய கிரிக்கெட்டை மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் கோலி மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் பாராட்டினார்.

ரசிகர்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களை வழங்கிய கோலிக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.

வயது ஒரு தடையல்ல

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முடிந்தவரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் தன்வீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

“ஒரு வீரர் தன்னை உடற்தகுதியுடன் வைத்துக்கொண்டு சிறப்பாக செயல்படும் வரை வயது எதிர்மறையான விஷயம் அல்ல. அனுபவம் வாய்ந்த வீரர்கள் தங்களது ஆட்டத்தை சிறப்பாக கையாள்வதுடன், இளம் வீரர்களுக்கும் வழிகாட்ட முடியும்” என்று அவர் கூறினார்.

“இந்திய கிரிக்கெட்டுக்கு மெய்யான வரம்”

ரோஹித் சர்மாவின் தற்போதைய ஆட்டத்திறன் மற்றும் உடற்தகுதி குறித்து பேசிய தன்வீர், “ரோஹித்தால் தனது உடற்தகுதியையும் ஆட்டத்திறனையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடிந்தால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் முடிந்தவரை தொடர்ந்து விளையாடுவது இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த உண்மையான வரமாகும்” என்று சோஹைல் தன்வீர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT