கிரிக்கெட்

கொல்கத்தா கேப்டன் அஜின்கியா ரகானேவுக்கு அபராதம் விதிப்பு

கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரகானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதின. இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இதனால், அந்த அணி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக கொல்கத்தா அணி பந்து வீசியதால், அந்த அணியின் கேப்டன் அஜின்கியா ரகானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.