கொல்கத்தா,
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் நுழைந்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்தை பிடிக்க 5 அணிகள் போட்டியில் உள்ளன.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பு சற்று அதிகரிக்கும். அதேவேளை, ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்பு சரிந்து பிற அணிகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.