கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கே.எஸ்.பரத் ஓய்வு

2024-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

புதுடெல்லி,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் 2023-ம் ஆண்டு அறிமுகமான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கே.எஸ். பரத் இதுவரை 7 டெஸ்டில் விளையாடி 221 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆடியதும் அடங்கும். 2024-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த 32 வயதான கே.எஸ்.பரத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்திய அணிக்காக ஆடியது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்ற குறிப்பிட்ட பரத், ஆதரவாக இருந்த கிரிக்கெட் வாரியம், பயிற்சியா ளர்கள், சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT