கிரிக்கெட்

நீண்ட நாள் தோழியை கரம்பிடித்த குல்தீப் யாதவ்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தனது நீண்டநாள் தோழியான வான்ஷிகாவை நேற்று திருமணம் செய்தார்.உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள முசோரி மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதியில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

குல்தீப் யாதவ் - வான்ஷிகா தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.முன்னதாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.