மும்பை,
ஆண்கள் யு19 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் யு19 ஆசியக் கோப்பை தொடர் ஓமன் நாட்டின் மஸ்கட்டில் நவம்பர் 5 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நவம்பர் 6-ம் தேதி நேபாளத்தையும், நவம்பர் 8-ம் தேதி பாகிஸ்தானையும், நவம்பர் 10-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும் எதிர்கொள்கிறது.
மற்றொரு பிரிவான குரூப் பி-யில் வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 12-ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 14-ம் தேதியும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 வீரர்கள் கொண்ட இந்த அணியின் கேப்டனாக லக்சயா ராய்ச்சந்தானியும், துணைக் கேப்டனாக யஷ்பர்தன் சிங் சவுகானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விரேந்திர சேவாக், ராகுல் டிராவிட் ஆகியோரின் மகன்களான ஆர்யவீர் சேவாக், அன்வய் டிராவிட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மேலும், வி.கே. வினீத், குஷாக்ரா ஓஜா, அர்ஜுன் ராஜ்புத், மனால் சவுகான் உள்ளிட்ட இளம் வீரர்களும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக அன்வய் டிராவிட், ரஜத் பாகேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
1. லக்சயா ராய்ச்சந்தானி - கேப்டன்
2. ஆர்யவீர் சேவாக்
3. வி.கே. வினீத்
4. யஷ்பர்தன் சிங் சவுகான் - துணைக் கேப்டன்
5. குஷாக்ரா ஓஜா
6. அர்ஜுன் ராஜ்புத்
7. மனால் சவுகான்
8. அன்வய் டிராவிட் – விக்கெட் கீப்பர்
9. ரஜத் பாகேல் – விக்கெட் கீப்பர்
10. வி. யஷ்வீர்
11. ஆர்யன் சவ்சானி
12. மோஹித் உல்வா
13. காவ்யா படேல்
14. ஷாவின் வினோத்
15. இஷான் சூட்
இந்திய இளம் அணி ஆசியக் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.