கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. போட்செப்ஸ்ட்ரூம் மைதானத்தி இந்திய நேரப்படி நாளை மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற தென் ஆப்பிரிக்காவும், ஆறுதல் வெற்றிபெற ஆஸ்திரேலியாவும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.