பெல்பாஸ்ட்,
அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. போட்டி, இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஹேரி டெக்டர்(53 ரன்கள்) நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். கேப்டன் லோர்கன் டக்கர் 15 ரன்களில் கேட்ச் ஆனார். பெஞ்சமின் காலிட்ஸ் 37 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 19 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் அயர்லாந்து அணி அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.