கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: சதம் விளாசிய படிக்கல்; இந்தியா 259/3 (70 ஓவர்கள்)

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் படிக்கல் சதம் விளாசினார். சுப்மான் கில் அரை சதம் விளாசினார்.

கொழும்பு

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 70 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 259 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. கடந்த 15-ந்தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

கடைசி டெஸ்ட்

இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் (45), கே.எல். ராகுல் (18) ஆட்டமிழந்ததும், விளையாட வந்த தேவ்தத் படிக்கல் அரை சதம் விளாசினார். பின்னர் தொடர்ந்து விளையாடிய அவர், 168 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.

70 ஓவர்

கேப்டன் சுப்மான் கில்லும் அரை சதம் விளாசினார். அவர் 108 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்திருந்தபோது, நிரோஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 3 ரன்கள் எடுத்தபோது ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். ரவீந்திராவும், படிக்கல்லும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

இந்தியா 70 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது. அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும், லஹிரு குமரா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT