கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச தொடர்களுக்கான ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணி அறிவிக்கப்பட்டது.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதியில் பாகிஸ் தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொட ரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ராவல்பிண்டியில் வருகிற 30-ந் தேதியும், 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டி முறையே ஜூன் 2, 4-ந் தேதிகளில் லாகூரிலும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசம் சென்று அந்த அணிக்கு எதிராக டாக்காவில் 3 ஒருநாள் போட்டிகளிலும் (ஜூன்.9, 11, 14-ந் தேதி), சட்டோகிராமில் மூன்று 20 ஓவர் போட்டிகளி லும் (ஜூன். 17, 19, 21-ந் தேதி) பங்கேற்கிறது.

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச தொடர்களுக்கான ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணி அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான அணியில், ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் ஒருநாள் அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ், முன்னணி வேகப் பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு பணிச் சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.