கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் லிட்டன் தாஸ் விளையாட வாய்ப்பு

டெஸ்ட் தொடருக்கு அவர் திரும்புவாரா என்பது அவரது உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும்.

டாக்கா,

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் லிட்டன் தாஸுக்கு ஏற்பட்ட காயம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் அவர் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் திரும்புவாரா என்பது அவரது உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும்.

மற்றொரு வங்கதேச வீரரான நயீம் ஹசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மீண்டும் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மருத்துவக் குழுவின் அனுமதி கிடைத்தால் அவர் மீண்டும் விளையாடலாம்.

SCROLL FOR NEXT