கிரிக்கெட்

லிவிங்ஸ்டன், எட்வர்ட்ஸ்சை டிரேடிங் முறையில் வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

சன்ரைசர்ஸ் அணியால் ரூ.13 கோடிக்கு வாங்கப்பட்ட லிவிங்ஸ்டன், தற்போது ரூ.6 கோடி என்ற விலையில் சென்னை அணியில் இணைகிறார்.

சென்னை,

டிரேடிங் முறையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த இரண்டு வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளது.

ஐபிஎல் டிரேடிங்

2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 17-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அணிகள் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

லிவிங்ஸ்டன், எட்வர்ட்ஸ்

இந்த நிலையில், டிரேடிங் முறையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த இரண்டு வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளது. அதாவது, அதிரடி ஆல்ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜாம் எட்வர்ட்ஸ் ஆகியோரை சென்னை அணி வாங்கியுள்ளது. இவர்களுக்காக நாதல் எல்லிஸ் மற்றும் கலீல் அகமது ஆகிய இரு வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு சென்னை அணி கொடுத்துள்ளது.

இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான லிவிங்ஸ்டன், முதலில் சன்ரைசர்ஸ் அணியால் ரூ.13 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.6 கோடி என்ற விலையில் சென்னை அணியில் இணைகிறார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான எட்வர்ட்ஸ்சும், தனது தற்போதைய கட்டணமான ரூ.3 கோடிக்கு சென்னை அணியில் இணைகிறார். ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாவதற்கு முன்பே சன்ரைசர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட எட்வர்ட்ஸ், கால் காயம் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT