லண்டன்,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, நாட்சிவெர் தலைமையிலான இங்கி லாந்து அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோது கிறது. இந்த டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.
142 ஆண்டு காலமாக லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்கள் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டின் தாய கம் என்று அழைக்கப்படும் லார்ட்சில் அரங்கேறும் முதல் பெண்கள் டெஸ்ட் போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் சைவர்-ப்ரண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.